கோரிக்கைகளை வலியுறுத்தியும் போலீசாரை கண்டித்து ஸ்ரீதர் வாண்டையார் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

சீர்காழியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பரபரப்பு போலீசாருடன் வாக்குவாதம் சிதம்பரத்தில் பரபரப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கோவில் திருவிழாவிற்கு நேற்று வருகை தந்த நடிகர் கருணாஸை கண்டித்து மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர் இதனை கண்டித்து இன்று மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் சீர்காழி காவல் நிலையம் முன்பு சாகும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் அவரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர் மாலை 6 மணி அளவில் கைது செய்தவர்களை விடுதலை செய்து மண்டபத்தை விட்டு வெளியேற போலீசார் தெரிவித்தனர், வெளியேற மறுத்து மூ.மு.க தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் இரவும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார் தங்களது கோரிக்கைகளான கள்ளர் ,அகமுடையார், மறவர் ஆகியோரை தேவர் இனம் என அறிவித்து தனி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிகையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் இந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தார் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மகாராணி, சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் யுவபிரியா ஆகியோர் உண்ணாவிரத்தை கைவிட கோரி வலியுறுத்தி வந்தனர் இந்நிலையில் போலீசார் ஸ்ரீதர் வாண்டையாருக்கு மருத்துவ பரிசோதனை செய்து அதில் அவரது உடல் நிலை ரத்த அழுத்தம் உயர்வாக உள்ளதால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கோரி அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை கலைக்கும் நோக்கோடு செயல்பட்டனர் இதனால் ஆத்திரமடைந்த மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் அடைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்தின் மேற் கூரையின் மீது தனது கட்சி துண்டை போட்டு திடீரென தற்கொலை முயற்சி செய்து கொள்ள முயன்றார் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் ஸ்ரீதர் வாண்டையார் தனது போராட்டத்தை சிதம்பரத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு உண்ணாவிரதத்தை தொடரப்போவதாக தெரிவித்து மண்டபத்தை விட்டு வெளியேறினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

55 − = 46