இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு கிராம மக்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு ஊர்வலமாக வருகை தந்து வரவேற்பளித்தனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் மிக சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இந்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் தனது சொந்த கிராமத்திற்கு வருகை புரிந்தார். அவருக்கு வழிநெடுகிலும் அவரது ரசிகர்கள் மற்றும் கிராம மக்கள் உறவினர் என ஆயிரக்கணக்கானோர் பட்டாசு வெடித்து மேளதாள முழங்க சிறப்பாக வரவேற்றனர்.
நடராஜனை வரவேற்க சின்னப்பம்பட்டி மக்கள் சாலையின் இருபுறமும் நின்று உற்சாகமாக வரவேற்பளித்தனர்.இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சாரட்டு வண்டியில் ஒவ்வொரு பகுதிக்கும் நின்று ரசிகர்கள் மற்றும் அவரது உறவினர்களையும் வரவேற்பை ஏற்றுக் கொண்டு ஊர்வலமாக வந்தார். சொந்த ஊருக்கு வருகை தந்தார் நடராஜனை அப்பகுதி மக்கள் திருவிழாவில் கலந்து கொள்வது போல் ஊர் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

73 − = 64