‘பிக்பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சியில், ஆரி டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சியில், ஆரி டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் இடம் பாலாஜிக்கு கிடைத்தது.

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம், துவங்கிய ‘பிக்பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சி, 105 நாட்களாக நடந்து வந்த நிலையில், கடைசி நாளான நேற்று(ஜன.,17), ‘கிராண்ட் பைனல்’ சிறிது நேர தாமதத்துடன் நேரலையாக ஒளிப்பரப்பானது. 16 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த போட்டியில், ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதி போட்டியில் இருந்தனர்.

யார் டைட்டில் வின்னர் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், 5வது இடம் பெற்று சோம், முதலில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரை கடந்த முறை வின்னரான முகின் வீட்டிற்குள் சென்று அழைத்து வந்தார். அடுத்ததாக 4வது இடம் பிடித்த ரம்யா பாண்டியன் வெளியே அனுப்பப்பட்டார். அவரை கவின் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அழைத்து வந்தார். பின் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நடிகை ஷெரின், 3வது இடம் பெற்ற ரியோவை, பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேறினார்.

பின் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்புடன், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல், ஆரியையும், பாலாஜியையும் மேடைக்கு அழைத்து வந்தார். அனைவரும் எதிர்பார்த்தபடி, அதிக ஓட்டுக்கள் பெற்ற ஆரியை, ‘பிக்பாஸ் சீசன் 4’ டைட்டில் வின்னராக கமல் அறிவித்தார். அவருக்கு 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கிடைத்துள்ளது. அவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பாலாஜிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. அவருக்கு 6 கோடியே 16 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கிடைத்தன.இதனையடுத்து ‘பிக்பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சி முடிவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 40 = 45