புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் 13 ஏழை ஜோடிகளுக்கு இன்று இலவச திருமணத்தை நடத்திவைத்தது

புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் 13 ஏழை ஜோடிகளுக்கு இன்று இலவச திருமணத்தை நடத்தி வைத்து 6.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியது.
புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் இன்று புதுக்கோட்டை சங்கர மடம் ரோட்டில் அமைந்துள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள புகழ் வாய்ந்த கரிம் ஹாஜியார் திருமண மண்டப திறப்பு விழாவினை முன்னிட்டு இன்று (17.1.2021) காலை 10 மணியளவில் 13 ஏழை ஜோடிகளுக்கான இலவச திருமணங்களை வெகு சிறப்பாக நடத்திவைத்தது.

இந்த விழாவிற்கு சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் சேவியர் , ஹபிபுல்லா, ஆரோக்கியம், அருணாச்சலம், சார்லஸ், கனகராஜன், கருப்பையா, தற்போதைய ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் சொக்கலிங்கம் ஆலோசனை வழங்க சங்கத் தலைவர் ஜெயக்குமார், செயலாளர் ராஜாமுகமது, பொருளாளர் சீனிவாசன் திருமண ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். 13 ஏழை ஜோடிகளுக்கு ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியாக சீர்வரிசை, பாத்திரங்கள், படுக்கை மெத்தை விரிப்பு, தங்கத்தாலி, சீர் சாமான்கள் என தலா 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கல்யாண சீர் சாமான்கள் வழங்கப்பட்டது. 13 திருமண ஜோடிகளுக்கும் அவர்களது உற்றார் உறவினர்களுடன் சுமார் 500 பேருக்கு சிறப்பு கல்யாண விருந்து மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணமக்களை வாழ்த்த வருகை தந்த அத்துணை சமூக ஆர்வலர்களையும் திருமணத்திற்கு நன்கொடை அளித்த நன்கொடையாளர்கள் சேவியர், கதிரேசன், சொக்கலிங்கம், தங்கமணி, ஹபிபுல்லா, கண்ணன், ஜெயக்குமார், பழனிவேலு, மணிகண்டண், ரவிச்சந்திரன், புகழேந்தி, சார்லஸ்,குணசேகரன், அருண், கருப்பையா, பிரகாஷ், இப்ராம்ஷா, ஷபியுல்லா, சீனிவாசன், சொக்கலிங்கம், சோலையப்பன், ராஜாமுகம்மது, கனகராஜன், நடராஜன், தனஞ்ஜெயராமசந்திரன், ராஜசேகரன், முகம்மது இக்பால், லியாகத்அலி, கதிரேசன், கோபிநாத், ராமகிருஷ்ணன், சரேஷ்குமார் உள்ளிட்டோர் தங்களை அன்புடன் அழைத்து மகிழ்ந்தனர்.

சமூக அமைப்பான ரோட்டரி சங்கம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த பகுதி மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகின்றது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அத்தனை ரோட்டரி சங்கங்களும் முன்னோடிசங்கமாக விளங்கிவரும் புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் இன்று 13 ஏழை எளியோரை கண்டறிந்து அவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளது இந்த விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தலைசிறந்த வணிகர்கள், வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 4