புத்தாண்டில் புதிய அறிவிப்பை வெளியிட்டது ஜியோ நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

‘ஜியோ’ அல்லாத பிற நிறுவனங்களுடைய தொலைபேசிகளுடன் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு, இனி கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என, ‘ரிலையன்ஸ் ஜியோ’ தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜியோவிலிருந்து, பிற நெட்வொர்க்குகளுக்கு, இந்தியாவிலிருந்து எந்த பகுதிக்கும் இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

ஒரு நெட்வொர்க்கிலிருந்து, இன்னொரு நெட்வொர்க்குக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கான, ஐ.யு.சி., எனும், பயன்பாட்டுக் கட்டணத்துக்கான காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, இத்தகைய அறிவிப்பை ஜியோ வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, இந்தியாவுக்குள் ஜியோவிலிருந்து, ஜியோவுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு கட்டணம் இல்லை என்ற நிலையில், இன்றிலிருந்து பிற நிறுவன தொலைபேசிகளுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளும் முற்றிலும் இலவசம் ஆகின்றன.

கடந்த ஓராண்டாக, ரிலையன்ஸ் ஜியோ, அதன் வாடிக்கையாளர்களிடம், பிற நெட்வொர்க் அழைப்புகளுக்கு, நிமிடத்துக்கு, 6 காசுகள் வீதம் கட்டணம் வசூலித்து வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

71 + = 76