புதுக்கோட்டையில் 300 காவலர்கள் கலந்து கொண்ட அணி வகுப்பு நிகழ்ச்சி

புதுக்கோட்டையில் 300 காவலர்கள் கலந்து கொண்ட அணி வகுப்பு நிகழ்ச்சியானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு சிறப்பு காவல்துறை இயக்குநர் ராஜேஷ்தாஸ் உத்தரவின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையினர் அணி வகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜெயராம் மற்றும் காவல்துறை துணைத்தலைவர் ஆனிவிஜயாவின் ஆலோசனையின்படி, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன் தலைமையில் மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் நான்கு துணை காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு காவல் ஆய்வாளர்கள், நான்கு உதவி ஆய்வாளர்கள், 50-புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், 172-அதிவிரைவுப்படையினர்கள்(மத்தியமண்டலம், திருச்சி சரகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம்), 80-தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர்கள் உட்பட 300 காவலர்கள் பொதுமக்களுக்கிடையே உள்ள அச்சத்தை போக்கும் விதமாகவும், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இன்று புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்திலிருந்து காவல் அணி வகுப்பு நிகழ்ச்சி துவங்கப்பட்டு பழைய அரசு மருத்துவமனை, பழனியப்பா முக்கம், திலகர்திடல் மற்றும் உழவர்சந்தை வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சுமார் 3 கி.மீ தூரம் நடத்தப்பட்டது. இந்த அணி வகுப்பிற்கு பின்னர் புதிய பேருந்து நிலையத்தில் லத்திகவாத்து பயிற்சியும் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

45 − = 40