15 லட்சம் ரூபாய் விபத்து காப்பீட்டை துரிதமாக பெற்றுத்தந்த யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம்

யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தில் 15 லட்சம் ரூபாய் விபத்து காப்பீட்டு தொகையை கட்டியவர் இறந்ததால் அவருக்கான தொகை அவரது குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டது.

மதுரை புதூர் பகுதியை சேர்ந்தவர் லூர்துசாமி. இவர் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தில் கடந்த ஓராண்டிற்கான இரு சக்கர வாகன காப்பீட்டுத் தொகை கட்டியுள்ளார் .எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் அவர் மரணமடைந்து விட்டார். தனி நபர் விபத்து காப்பீட்டு தொகையான 15 லட்சம் ரூபாய் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.இந்த நிகழ்வில் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தின் முதுநிலை கோட்ட மேலாளர் ராஜேந்திரன், லூர்து சாமி மனைவி ஆரோக்ய மேரியிடம் 15 லட்சத்திற்குரிய காசோலையை வழங்கினார். இதில் நிர்வாக அலுவலர் தனலெட்சுமி, ஏ.ஓ.டி முத்துவேல், சசிகலா உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர். யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தில் குறைந்த அளவு பிரீமியம் தொகையை செலுத்தினால் மிக அதிக அளவிலான காப்பீட்டை பெற முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 6 = 1