நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மத்திய அரசின் மூலம் தேவையான உதவிகள் செய்து தரப்படும் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது நிவர் புயலாக உருவாகியுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்கால் – மாமல்லபுரம் இடையே 25ம் தேதி பிற்பகலில் கரையைக் கடக்கத்தொடங்கும். அப்போது மணிக்கு 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும். மிக கனமழை பெய்யும். புயல் கரையைக் கடந்து வட தமிழகத்தின் வழியாக தெலங்கானா மாவட்டத்தின் வழியாக சென்று 26ம் தேதி மும்பை பகுதியில் வலுவிழந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், நிவர் புயலை எதிர்கொள்ள மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். தேவைப்படும் உதவி, ஒத்துழைப்பு மத்திய அரசால் வழங்கப்படும் என்று முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியை தொடர்பு கொண்டும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

94 − = 88