நிவர் புயல் எதிரொலி: சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைப்பு

நிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற இருந்த சி.ஏ. தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை, கடலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் சி.ஏ.இன்டர்மீடியட் தேர்வுகள் இன்றும், நாளையும் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வங்க கடலில் நிலை கொண்டுள்ள ‘நிவர்’ புயல், வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று புதுச்சேரியிலும் புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. புதுச்சேரியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் நிவர் புயல் காரணமாக, நடைபெற இருந்த சி.ஏ. தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சி.ஏ. தேர்வுகள் வருகிற டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

49 − 42 =