இந்திய மருத்துவ கழகம் தமிழ்நாடு கிளை சார்பில் விருது வழங்கல்

இந்திய மருத்துவ கழகம் தமிழ்நாடு கிளை சார்பாக விருது வழங்கும் விழா ஈரோட்டில் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் கொரோனா என்ற கொடிய தொற்றுநோய் பரவலை தடுக்க, தாக்கத்தை குறைக்க இக்கட்டான இந்த அபாயமான சூழ்நிலையில் நாம் நமது ஒத்துழைப்பையும், ஆதரவையும் நம் சமூகத்திற்கும், அரசுக்கும் கொடுக்கும் பொருட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழிகாட்டுதலின் படி, மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி-ன் ஆணைக்கிணங்க, பொது சுகாதார துறையுடன் இணைந்து இந்திய மருத்துவ கழகம் புதுக்கோட்டை கிளை சார்பாக காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நகரின் பல்வேறு பகுதியில் 17.07.2020 முதல் 03.10.2020 வரை தொடர்ந்து இடைவிடாது 79 நாட்களாக 232 இடங்களில் காய்ச்சல் முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்டவர்கள் 12,717 பேர், காய்ச்சல் கண்டயரியப்பட்டவர்கள் 190 பேர், இம்முகாமிற்கு ஒத்துழைப்பு கொடுத்த செயலாளர் நவரத்தினசாமி, பொருளாளர் ராஜா மற்றும் நிர்வாகிகளுக்கும், காய்ச்சல் முகாம்களில் கலந்து கொண்டு தன்னலமற்ற சேவை ஆற்றிய மருத்துவர்கள் சாரதாமணி, அகமது மர்சூக், கோபாலகிருஷ்ணன், ஹரிராம், முகாமில் பங்கு கொண்ட மருத்துவமனைகளான டீம், மணிமேகலை, மாமலர், முத்துமீனாட்சி, பீவெல் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் இந்திய மருத்துவ கழகம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய மருத்துவ கழகம் தமிழ்நாடு கிளை சார்பாக ஈரோட்டில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டி, புதுக்கோட்டை கிளையின் தலைவர் மருத்துவர் கே.எச்.சலீம்க்கு விருது வழங்கப்பட்டது. இதில் மாநில தலைவர் ராஜா, அகில இந்திய தலைவர் தேர்வு ஜெயலால் மற்றும் மாநில தலைவர் தேர்வு பழனிசாமி ஆகியோர் விருது வழங்கினார்கள். இது குறித்து தலைவர் மருத்துவர் சலீம் கூறியவதாவது, மருத்துவ பணி செய்து கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, குணமாகி மீண்டு வந்த மருத்துவர்களுக்கும், உயிர் தியாகம் செய்த முஜிபுர் ரஹ்மான்க்கும் இவ்விருதுகளை சமர்பிக்கிறோம் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

38 + = 47