ஆலங்குடி அருகே நிவர் புயலுக்கு பயந்து விவசாயி வீட்டை தார்ப்பாய் கொண்டு அழகுபடுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதிகள் டெல்டா மாவட்டங்களை சார்ந்த பகுதி ஆகும். ஏற்கனவே இந்த பகுதிகளில் சென்ற இரு வருடத்திற்கு முன் கஜா புயல் கோரதாண்டவம் ஆடியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வந்துள்ள நிவர் புயலை எதிர்கொள்ள ஆலங்குடி, கொத்தமங்கலம் பகுதி கிராம விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்கள் சார்ந்த விசயங்களை பாதுகாத்துக்கொள்ளும் பணிகளில் தீவிரமான ஈடுபட்டு வருகின்றனர். அதாவது புயலில் மரங்கள் சாய்ந்துவிடாமல் இருக்க மரக்கிளைகளை வெட்டியும், தேவையான உணவுப் பொருட்களை சேமித்து பாதுகாப்பது, தேவையான மருந்துகள், முக்கிய ஆவணங்களை பாதுகாப்பதும், தங்களின் இருப்பிடங்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு விவசாயி கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியில் தனது இருப்பிடத்தை பாதுகாக்க தனது வீட்டை முழுவதுமாக தார்ப்பாயை கொண்டு வீட்டை மூடி புயலுக்கு சேதமடையாமல் வீட்டின் மேல்பகுதியை கயிறு உதவியுடன் கட்டி பாதுகாக்கும் முறையில் ஈடுபட்டார்.