புதுக்கோட்டை மக்கள் நீதி மய்யம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் 66வது பிறந்தநாளினையொட்டி நடத்தப்பட்ட மாநில அளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா புதுக்கோட்டை மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். திருமயம் ஒன்றிய செயலாளர் திருமேனி, மத்திய மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளர் கார்த்திக் மெஸ் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சுந்தர் மெஸ் சுந்தர் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் அருண் சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். வழக்கறிஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் பொன்.கஜேந்திரன், மய்யம் ஐடி மாநில துணைச் செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். இதில் தமிழாசிரியர் கவிஞர் சுந்தர், யோசி நிறுவனத்தின் தலைமை பயிற்றுனர் கவி.முருகபாரதி, சுபாஷினி ஆகியோர் பேச்சுப் போட்டிக்கான நடுவர்களாக பங்கேற்று பரிசுக்குரிய மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர். இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 10,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 5,000, மூன்றாம் பரிசாக இருவருக்கு தலா ரூபாய் 2,500 மற்றும் பாராட்டு சான்றிதழும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். ஊக்கப் பரிசாக தலா ரூபாய் 1000 ஆறு நபர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புக்கான பாராட்டு சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் முதல் பரிசு திருச்சி மஞ்சு ஸ்ரீ, இரண்டாவது பரிசு புதுக்கோட்டை மகா நிவேதிதா, மூன்றாம் பரிசு கன்னியாகுமரி ஹான்ஸி ராஜேஷ், புதுக்கோட்டை கிஷோர்கான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாவட்ட செயலாளர் ஜெய் பார்த்தீபன், பொறியாளர் அணி முருகவேல், பகுதிப் பொருப்பாளர் பரணிதரன், தொழிலாளர் அணி சகுபர் சாதிக், மாதவன், திருமலை, பாஸ்கர், தனலெட்சுமி, நிர்மலா, உமாமகேஸ்வரி, நவீன்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக மய்யம் ஐடி யின் மத்திய மாவட்ட செயலாளர் ஹக்கீம் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =