நிவர் புயல் எதிரொலி சென்னையில் மழை தொடங்கியது

நிவார் புயல் காரணமாக, இன்று இரவு சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில், சைதாபேட்டை, கிண்டி, கோடம்பாக்கம், தாம்பரம், கிண்டி, நுங்கம்பாக்கம், அம்பத்துார், ஆவடி, மீஞ்சூர், திருவொற்றியூர், துரைப்பாக்கம், சேப்பாக்கம், திருவான்மியூர், செம்பரபாக்கம், வண்டலுார்,அனகாபுத்துார் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

மருத்துவ கலந்தாய்வு செப்.30க்கு ஒத்திவைப்பு

நிவார் புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படாத வண்ணம் நாளை(24.11.2020) செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு 2020-2021 வரும்( 30.11.2020) திங்கட்கிழமை அன்று நடைபெறும் வகையில் மருத்துவ கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த விரிவான அறிக்கை மருத்துவக்கல்வி தேர்வு குழு இணையதளத்தில் வெளியிப்படும். முதல்வர் உத்தரவுப்படி நாளை( 24.11.2020) கலந்தாய்வுக்கு ஏற்கனவே வந்திருப்பவர்களுக்கு சுகாதார துறை மூலம் தக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1