கட்சி ஆரம்பிப்பதை நிறுத்தினார் எஸ்.ஏ.சந்திரசேகர்

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்வதை தற்காலிகமாக நிறுத்தினார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிய வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார். தனது பெயரை பயன்படுத்த நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சி ஆரம்பிக்கும் பணியை தற்காலிகமாக கைவிட்டார் எஸ்.ஏ.சி. இக்கட்சியின் மாநில தலைவர் பத்மநாபன், பொருளாளரான விஜய்யின் தாய் ஷோபா ஆகியோர் ராஜினாமா செய்ததால் இந்த முடிவை எடுத்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்று கடந்த நவம்பர் 5ஆம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம் எழுதியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 27 = 33