வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் தன் மனைவி வேறு நபருடன் குடும்பம்நடத்துவதால் மீட்டுத் தரக்கோரி கணவர்: புதுக்கோட்டை எஸ்பியிடம் புகார்.

வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் தன் மனைவியையும் குழந்தைகளையும் மீட்டுத் தரக்கோரி கணவர் சாமி என்பவர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக தற்போது பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. அவருக்கும் தாய்மாமன் சாமி என்பவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப்பின் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான சாமி வருமானம் ஈட்டுவதற்காக வெளிநாடு சென்றுள்ளார். வருடம் வருடம் விடுமுறையில் தான் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு வருகை தரும் சாமி தன் மனைவியுடன் அங்கு வசித்துள்ளார். இதனிடையே மனைவி ராஜேஸ்வரிக்கு புதுக்கோட்டையில் அரசு வேலை கிடைத்துள்ளது. அரசு வேலை கிடைத்ததை அடுத்து ராஜேஸ்வரி மற்றும் இரு குழந்தைகளுடன் கணவர் சாமி புதுக்கோட்டையில் வாடகை வீடு எடுத்து அவர்களை குடியமர்த்தி விட்டு பணி காரணமாக மீண்டும் மலேசியா சென்று விட்டார்.

இதனிடையே தான் மலேசியாவில் சம்பாதித்த பணம் மற்றும் நகை அனைத்தையுமே தன் மனைவி பேருக்கு மாதம் மாதம் அனுப்பியுள்ளார் சாமி. இதனிடையே புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை பார்த்துவந்த சாமியின் மனைவி ராஜேஸ்வரி பதவி உயர்வு காரணமாக தற்பொழுது குடுமியான்மலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகின்றார். இதனிடையே சாமியின் மனைவி வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கும் புதுக்கோட்டையில் அவர் வீடு அருகே குடியிருந்து வரும் தாஸ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. தாஸ் என்பவருக்கு திருமணமாகி பிரேமா என்ற மனைவி உள்ளாராம்

இதனிடையே மலேசியாவில் வேலை பார்த்து வரும் ராஜேஸ்வரியின் கணவர் சாமிக்கு தன் மனைவி ராஜேஸ்வரி, தாஸ் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தையடுத்து. பணியை துறந்துவிட்டு புதுக்கோட்டைக்கு வந்து பார்த்த பொழுது தன் மனைவி ராஜேஸ்வரி தாஸ் என்பவருடன் குடும்பம் நடத்தி வருவதை நேரில் பார்த்துவிட்டு அதிர்சியடைந்து ராஜேஸ்வரியிடம் கேட்டபொழுது தாஸ் மற்றும்  ராஜேஸ்வரி இருவரும் சேர்ந்து சாமியை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் சாமியை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர் இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சாமி இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் புகார் கொடுத்துள்ளார் அதில் தான் 12 வருடங்களாக சம்பாதித்த பணம் மற்றும் நகையை அபகரித்து தாஸ் என்பவர் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் தன் மனைவி ராஜேஸ்வரி மற்றும் இரு குழந்தைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்றும் தன் மனைவி மற்றும் குழந்தைகளையும் நகை மற்றும் பணத்தை மீட்டுத் தரவேண்டும் எனபுகார் அளித்துள்ளார் தற்பொழுது இந்த புகார் மனு மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அரசு பணியில் வருவாய்துறையில் நல்ல சம்பளத்தில் வேலைபார்த்துவரும் பெண் ஊழியர் தன்னுடைய இரண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைக்காமல் மற்றவருடன் குடும்பம் நடத்திவருவது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 26 = 36