மதுரையில் புதிய வாக்காளர் சேர்க்கும் முகாம்

மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழிகாட்டுதலின் படி புதிய வாக்காளர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.

மதுரையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு முழுவதும் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.அதனை தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர்கே.ராஜூ வழிகாட்டுதலின்படி மேற்கு தொகுதி 19 ,22 ஆகிய வார்டுகளில் புதிய வாக்காளர் சேர்க்கும் முகாம் வட்டச் செயலாளர் நாகராஜ் மற்றும் 22 வது வட்ட செயலாளர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத்தலைவர் உசிலை டி.ஆர்.தவசி, பூத் கமிட்டி தலைவர்கள் சதீஷ்குமார், ஜெயபாண்டி, ரவி, திருப்பதி, கார்த்திகேயன், பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 12 = 13