தமிழகத்தில் இன்று 1,663 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 1,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,68,340-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இன்று 1,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,68,340 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,43,838 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2,133 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,586 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,11,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,14,70,439 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 69,190 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 217 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 12,916 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,64,227 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,010 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,04,080 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 653 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 4 =