சேலத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப அறுவை சிகிச்சை குறித்த பிரச்சார வாகனம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

உலக வாசக்டமி தினத்தை முன்னிட்டு சேலத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ராமன் துவக்கி வைத்தார்.

உலக வாசக்டமி தினம் இன்று முதல் டிசம்பர் 4ம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராமன் கலந்துகொண்டு ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும், பேரணியையும் கொடி அசைத்து துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முறைகள் மற்றும் பயன்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வெளியிட சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் பெற்றுக்கொண்டார். மேலும் உலக வாசக்டமி தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் 7 இடங்களில் சிறப்பு குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பயன்பெறுமாறும் கலெக்டர் கேட்டுக் கொண்டார். கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளும் நபருக்கு ஊக்கத்தொகையாக ரூ.1100 வழங்கப்படுவதாகவும், கடந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு முகாமில் 23 ஆண்கள் பயன் பெற்றுள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 3