சமயநல்லூர் ஊராட்சியில் உள்ளாட்சி கட்டடங்களை புதுப் பொலிவுடன் சீரமைத்த ஊராட்சி தலைவர்

சமயநல்லூர் ஊராட்சியில் உள்ளாட்சி கட்டடங்களை புதுப் பொலிவுடன் சீரமைத்த ஊராட்சி தலைவர் வழக்கறிஞர் மலையாளம் பொதுமக்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

சமயநல்லூர் ஊராட்சி மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கின்றனர். இங்கு நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவராக வெற்றி பெற்ற வழக்கறிஞர் மலையாளம் பல்வேறு திட்டப்பணிகளை செய்து வருகிறார். கொரோனா தடுப்பு பணிகளின் போது சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு பரிசோதனை முகாமை நடத்தினார். இதை தொடர்ந்து சேதமடைந்த நிலையில் நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் இருந்து வந்த சமயநல்லூர் உள்ளாட்சி கட்டிடங்கள் ஐந்தை காண்போர் வியக்கும் வகையில் புதுப்பித்து தந்துள்ளார்.மேலும் சமயநல்லூர் ஊராட்சியில் குடிநீர் இணைப்புகள், சிறு மின்விசைக் குழாய்கள், கைக்குழாய்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள், உள்ளாட்சிக் கட்டடங்கள், உள்ளாட்சி பள்ளிக் கட்டடங்கள், ஊரணிகள் அல்லது குளங்கள், விளையாட்டு மையங்கள், சந்தைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள், ஊராட்சி சாலைகள், பேருந்து நிலையங்கள், சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 8 மாதங்களில் சமயநல்லூர் ஊராட்சி தலைவர் மலையாளத்தின் செயல்பாடுகள் பொதுமக்களிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 2 =