கறம்பக்குடி வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

கறம்பக்குடி வருவாய்த்துறை அலுவலர் சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க துண்டு பிரசுரங்கள் விநியோகத்துடன் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியலை கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டார். அதன்படி தாலுகாவில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆணையிடப்பட்டது. அதன்படி புதுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட கறம்பக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கறம்பக்குடி வட்டாட்சியர் சேக் அப்துல்லா தலைமையில் வள்ளுவர் திடலில் துவக்கி வைக்கப்பட்டது. தாலுகாவில் 2021ம் ஆண்டிற்கான தேர்தல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்தப் பேரணியில் தேர்தல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் மற்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. 18 வயது பூர்த்தியடைந்த பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்திடுவோம், வாக்காளர்கள் ஜனநயாகத்தை காத்திடுவோம், வாக்காளர்கள் 100 சதவீதம் அனைவரும் வாக்காளிக்க வேண்டும், ஓட்டுக்கு பணம் வாங்குவதை தவிர்ப்போம், ஜனநாயகத்தை காத்திடுவோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியவாறு துண்டு பிரசுங்களை நகரில் வழங்கி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கறம்பக்குடி வருவாய்த்துறையினரால், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி வள்ளுவர் திடலில் தொடங்கி வைத்தனர். பேரூராட்சி அலுவலக ரோடு, காவல் நிலைய ரோடு, பேருந்து நிலையம், கச்சேரி வீதி, சீனிகடை முக்கம், அம்புக்கோவில் முக்கம், பெரிய கடை வீதி வழியாக மீண்டும் வள்ளுவர் திடல் வந்தடைந்தது. வருவாய்த்துறை சார்பில் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமூக அமைப்பினர், அனைத்து அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் விழிப்புணர்வு பேரணியில் துண்டு பிரசுரங்களை வழங்கி கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 5 =