இலங்கை இராணுவத்தை வண்மையாக கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி தீர்மானம்

மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முபாரக் அலி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்கள் ஒளி முகம்மது மற்றும் ஷாஜிதீன் தீர்மானங்களை முன்மொழிந்தார்கள். இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் செய்யது அபுதாஹிர் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மதசார்பற்ற கூட்டனியில் மஜக இடபெறவேண்டும் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரியில் மனிதநேய ஜனநாயக கட்சி மதசார்பற்ற கூட்டனியில் இடம்பெற வேண்டும். பாரதிய ஜனதா கட்சி இடம்பெறும் கூட்டனியை தவிர்த்து ஜனநாயக மற்றும் சமூக நீதி காக்கும் கட்சிகளுடன் கூட்டனி அமைக்குமாறு மாநில தலைமையை கோருகிறோம்.

பருவநிலை மாற்றத்தை தொடர்ந்து இயற்கை சீற்றங்களும் தொடர் மழையும் வந்துக்கொண்டிருக்கிறது. எனவே இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவேண்டும். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை செய்யவேண்டும். தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை இராணுவத்தை வண்மையாக கண்டிக்கிறோம்
கச்சத்தீவு இலங்கையிடம் கொடுக்கப்பட்டது முதல் இன்றுவரை தமிழக மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் சிறைபிடிப்பது மற்றும் சேதப்படுத்துவது தொடர்ந்து நடைபெறுகிறது.கடந்த வாரம் நடுகடலில் மீனவர்களும் படகுகளும் இலங்கை இராணுவத்தினால் தாக்கப்பட்டுள்ளார்கள் இதை மனிதநேய ஜனநாயக கட்சி வண்மையாக கண்டிக்கிறது.

விவசாய கண்மாய்களில் ஆழ்துளாய் கினறுகளை அமைத்துதருக
கடைமடை விவசாய பகுதிகளுக்கு தண்ணீர் போதுமான அளவு வருவதில்லை. அதனால் கடைமடை பகுதிகளும் பொது நீர்நிலைகளை நம்பி இருக்கும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகிறது. கண்மாய்களில் ஆழ்துளாய் கினறு அமைத்து தந்தால் அதிகமாக மழை பெய்யும் நாட்களில் கண்மாய்களை நிரப்பிக்கொள்ள உதவும்.
எனவே கண்மாய்களின் நீர் வரத்துகளை சரிசெய்து ஆழ்துளாய் கினறுகளை அமைத்து தருமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 2 =