இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட பொதுகுழு கூட்டம்

சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க திமுக கூட்டணியில் வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது குழு கூட்டத்தில் தீர்மானம். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட பொதுகுழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீனிவாச ஹாலில் மாவட்ட தலைவர்கள் எம்.எ.எம். நிஜாம்(தெற்கு), அப்துல் வகாப் (வடக்கு) ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மில்லத் ஹஜ்ரத் கிராத் ஓதினார், தேசிய கவுன்சில் உறுப்பினர் ஜிஎஸ் எமன்னான், வடக்கு மாவட்ட பொருளாளர் வியாகத் அலி, ஓய்வு பெற்ற உதவி கலெக்டர் சாகுல் அமித், ஒய்வு பெற்ற காவல் உதவி – ஆணையர் அப்துல் அஜிஸ் முன்னிலை வகித்தனர். தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் நிறையுரையாற்றினார். மாநில துணை செயலாளர் வி.எம்.பாருக் சிறப்புரையாற்றினார், மாநில மகளிர் அணி பொருளாளர் ஷாஸ்மினாஸ், மாவட்ட நிர்வாகிகள் சாகுல் அமித், உமர் பாருக், முகம்மது நிஜாம், முசிறி சம்சுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கூட்டத்தில் அம்ஜத் இப்ராகிம் மகளிர் அணி பைரோஸ் ஹக்கிம், முஸ்தபா, இளைஞர் அணி அமிருதின் பைஜுர் ரஹ்மான், பரகத் அலி, ரஹிமா சாகுல் உட்பட வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே.ஹபிபுர் ரஹ்மான் வரவேற்புரையாற்றினார். கூட்ட நிகழ்வுகளை மாநில மாணவரணி செயலாளர் திருச்சி எம்.எச்.அன்சர் அலி தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் கீழே குறிப்பிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் பயணிக்கும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு திருச்சி கிழக்கு தொகுதி கேட்டு பெற தலைமையை வலியுறுத்துவது. திருச்சி காந்தி மார்க்கெட்டை பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகாக மீண்டும் திறக்க செய்வது. தேசிய குடி உரிமை திருத்த மசோதா சட்டத்தை திரும்ப பெற சட்டமன்றத்தில் வலியுறுத்த தமிழக அரசை வலியுறுத்துவது, திருச்சி ஜங்ஷன் மேம்பால பணியை துரிதப்படுத்த மத்திய – மாநில அரசை கேட்டு கொள்வது. கொரோனா காலத்தின் போது வாகன ஓட்டிகள், மதவழிபாடு செய்தவர்கள், ஆர்ப்பாட்டம், கோரிக்கை போராட்டம் நடத்தியவர் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவது, மஹல்லா ஜமாத்தளை வலிமை பெற செய்வது, கட்சிக்கு விரோதமாக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் நன்றி கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

81 + = 82