இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,232 பேருக்கு கொரோனா

TOPSHOT - People wearing facemasks as a preventative measure following a coronavirus outbreak which began in the Chinese city of Wuhan, line up to purchase face masks from a makeshift stall after queueing for hours following a registration process during which they were given a pre-sales ticket, in Hong Kong on February 5, 2020. - The new coronavirus which appeared late December has claimed nearly 500 lives, infected more than 24,000 people in mainland China and spread to more than 20 countries. (Photo by Anthony WALLACE / AFP) (Photo by ANTHONY WALLACE/AFP via Getty Images)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,50,598 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று 564 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,32,726 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 49,715 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 84,78,124 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 4,39,747 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் இதுவரை 13 கோடியே 06 லட்சத்து 57 ஆயிரத்து 808 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 10,66,022 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 35 = 38