ஆலங்குடியில் 26-ம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி சந்தைப் பேட்டையில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வருகின்ற 26-ம் தேதி நடைபெறும் நாடுதழுவிய பொது வேலை நிறுத்த மறியல் போராட்டத்தை விளக்கி ஆலங்குடியில் இடதுசாரிகள் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலங்குடி நகர் முழுவதும் விவசாய மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி மக்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று பிரச்சாரம் செய்தனர். இதனைத்தொடர்ந்து, சந்தைப் பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தர்ம.பிரசாத், பாலசுப்பிரமணியன், சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களுக்கு எதிரான, விவசாயிகளுக்கு விரோதமான திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், புதிய வரைவு மின்சார சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும், இயற்கை வள ங்களை அழிக்கும் சுற்றுச்சூழல் 2020 திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண் டும், கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக மாதம் ரூ.7500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விவசாய சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் மாதவன், சி.ஐ.டி.யு. மாவட்ட பொறுப்பாளர் மாரிகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சொர்ணகுமார், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், மணிமேகலை, முருகன், ஜீவா, ஆறுமுகம், மதியழகன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 4