அரியலூர் வட்டாரத்தில் சம்பா நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் : வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

அரியலூர் வட்டாரத்தில், சம்பா நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆ.சாந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆ.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில், அரியலூர் வட்டாரத்தில், சம்பா நெல் பயிர் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்பொழுது, பருவநிலை மாற்றத்தாலும், இயற்கை சீற்றங்களாலும், விவசாய நிலங்கள், பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு ஏற்படும் இழப்பீட்டிலிருந்து விவசாயிகளை காக்க, பயிர் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டு, இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய், இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே தற்போது, சம்பா பருவத்தில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கு கடைசி நாள் வருகிற டிசம்பர் மாதம் 15ம் தேதி ஆகும். சம்பா நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்ய, ஒரு ஏக்கருக்கான பிரிமியத் தொகை ரூபாய் 511.50 ஆகும்

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, பிரிமிய தொகையை செலுத்தி, ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் அருகில் உள்ள, பொது சேவை மையத்தை, தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதற்கான விழிப்புணர்வு முகாம், வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையில், அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி, பெரிய மணக்குடி ஆகிய வருவாய் கிராமங்களில் நடைபெற்றது. இம்முகாம்களில், அரியலூர் வட்டார வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 5