அதிமுக – பா.ஜ., கூட்டணி தொடரும்: பழனிசாமி, பன்னீர்செல்வம் அறிவிப்பு

வரும் தேர்தலில் அதிமுக – பா.ஜ., கூட்டணி தொடரும் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சென்னை கலைவாணர் அரங்கில் அரசு விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அமித்ஷா சிறந்த நிர்வாகி. ஜெ., வழியில் அதிமுக அரசு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவில் அதிமுக அரசு முதலிடத்தில் உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றிக்கனியை பறித்து, மீண்டும் ஆட்சியை பிடிக்கும். இனி வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜ., கூட்டணி தொடரும். தமிழகத்தின் முக்கிய நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


முதல்வர் பழனிசாமி பேசியதாவது: குடிமராமத்து பணிகள் மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. நீர்மேலாண்மை திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வளர்ச்சி திட்டங்களுக்காக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.குடிமராமத்து பணிகள் மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய நீர்தேக்க திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கடுமையான நேரத்தில், மக்களின் ஒத்துழைப்போடு வல்லரசு நாடாக மாற்ற பிரதமர் கடுமையாக உழைத்து வருகிறார். உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலை குறைக்க பிரதமர் முயற்சி செய்து வருகிறார். அவரின் முயற்சிக்கு தமிழகம் துணை நிற்கும். வல்லரசு நாடுகள் பாராட்டும் அளவிற்கு இந்தியா வளர்ந்ததற்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தான் காரணம். லோக்சபா தேர்தல் கூட்டணி தொடரும்.சட்டசபை தேர்தலில் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் அமரும். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 61 = 71