தஞ்சாவூரில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

தஞ்சாவூரில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை காணொலி காட்சி மூலம் கலெக்டரிடம் தெரிவித்தனர். அதில் கரும்பு விவசாயிகளுக்கு அனைத்து நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது, கூட்டுறவு அங்காடிகளில் உர இருப்பு விலைப்பட்டியலை வைக்க வேண்டும், தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவு மரவள்ளி சாகுபடி உள்ளதால் மரவள்ளி கிழங்கு ஆலை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு நேரடி நெல் கொள்முதல் செய்வதை போல் உளுந்து, சோளம், கடலை ஆகிய தானியங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் மற்றும் விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இக்கூட்டத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனர் அய்யம்பெருமாள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், செந்தில்குமார், கண்ணன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் இந்த விவசாயிகள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

76 + = 84