சட்டசபை தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் முதல்வர் பழனிசாமி வேண்டுக்கோள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணைமுதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்;அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில், அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று மாலை (20.11.2020 – வெள்ளிக்கிழமை), ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,அதிமுக  வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் முதல்வர் பழனிசாமிபேசியதாவது: வருகின்ற சட்டசபை தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் விதத்தில் தேர்தல்பணியாற்ற வேண்டும். வெற்றிக்காக அனைவரும் பாடு படவேண்டும்.

பார்லி தேர்தலில் தோற்ற போதிலும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது. இடை தேர்தலில் பெற்ற வெற்றியை போன்று சட்டசபை தேர்தலிலும் வெற்றிறெ வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

தேர்தல் குறித்து ஆலோசனை

தொடர்ந்து கட்சி வளர்ச்சிபணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1