கேரள மாநிலத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்ஜி.ஆனந்த் தொடர் சுற்றுபயணம்

கேரள மாநிலத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்  டாக்டர் ஆர்ஜி.ஆனந்த் மத்திய அரசின் சார்பில் தொடர்சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்.தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக  ஆர்ஜி.ஆனந்த் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எந்த ஒரு மூலையில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அங்கு உடனடியாக சென்று அவர்களுக்கு உதவிடும் நோக்கிலும் இனி அது போன்ற பாதிப்புகள் நடகாத வண்ணம் மாநில அரசுகளை வலியுறுத்துவதுடன் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துவருகின்றார்.

அதன் ஒருபகுதியாக ஆந்திரா,தெலுங்கானா,கர்நாடகா,புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து தற்போது கேரள மாநிலம் சென்று அங்கு குழந்தைகள் நலன் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.நேற்று மாநில முதல்வர்  பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் சந்தித்து குழந்தைகள் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள், அதற்கான பிரத்தியேக இலவச தொலைபேசி எண், குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் சம்வேதனா, மற்றும் குழந்தைகளுக்கான பிரத்தியேக 103 காவல் நிலையம் அமைத்தது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று அதிகமாவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் படி வேண்டுகோள் வைத்தார்.

அதனை தொடர்ந்து இன்று திருவனந்தபுரத்தில் கேரள காவல்துறையின்  ஐஜிபி விஜயன் தலைமையில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நிலையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் குறித்த தவறான தகவல்கள் பரப்புவோரை / பரப்புதலை தடுப்பு நடவடிக்கை நிலையம் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்தியேக காவல் நிலையங்களுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து, அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பிறகு கேரள மாநில பெண்கள்  குழந்தைகள் மற்றும் சமூக நீதிதுறை அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் குழந்தைகள் நலத்துறையை சார்ந்த துணை இயக்குனர் உடனான ஆலோசனை கூட்டத்தில் ஆணையத்தின் காவல் என்னும் திட்டம் அமல்படுத்துவது தொடர்பாகவும், மாநிலத்தில் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்  ஆர்ஜி.ஆனந்த் தொடர் சுற்றுபயணம் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடைப்பெற்றுவரும் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்க அவர் மேற்கொண்டுவரும் ஆய்வுகள் ஆலோசனைகள் கூட்டங்கள் அனைவராலும் பாராட்டும்படியாக உள்ளது.

பக்கபலமாக இருந்திடுவோம்.

மத்திய அரசின் உத்தரவை செயல் படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஓய்வின்றி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆர் ஜி ஆண் குழந்தைகளுக்கும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து அதனைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் அவருக்கு இந்திய அளவில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்து ஆதரவு கரம் பெருகி வந்தாலும் சமூக விரோதிகள் மத்தியில் அவருக்கான அச்சுறுத்தலும் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதாக தெரியவருகின்றது இன்றைய குழந்தைகள் நாளைய இளைஞர்கள் நாளைய இளைஞர்கள் எதிர்கால இந்தியாவின் தலைவர்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது குழந்தைகளை பாதுகாக்க அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில் களத்தில் நின்று போராடிவரும் ஆர்ஜி ஆனந்துக்கு நாம் அனைவரும் பக்கபலமாக இருந்திடுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

90 − 80 =