கறம்பக்குடி ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா

கறம்பக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக சங்கத் தலைவர் செந்தில் தலைமையில் மரக்கன்று நடும் விழா வீரடிப்பட்டி மயிலப்பசுவாமி திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கறம்பக்குடி ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர் VM.(எ) S.வீரப்பன்-ன் சேவைத் திட்டத்தின் கீழ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் விழாவினை துவக்கி வைத்தார். வருகை தந்த அனைவரையும் சங்கசெயலாளர் பொறியாளர் விஜயன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மேனாள் தலைவர்கள் ஞானசேகரன், சண்முகம், வருங்கால தலைவர் சதக்கத்துல்லா, வருங்கால செயலாளர் காந்தி, பொருளாளர் சதீஷ், மேனாள் செயலாளர் வெள்ளைச்சாமி, ரவி, பாலு மூர்த்தி, சிவா, தர்மலிங்கம், கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பொருளாளர் ஆனந்தம் தங்கவேலு அனைவருக்கும் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

63 − 62 =