கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மண்டல அளவிலான கூட்டம்

கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மண்டல அளவிலான கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு முருகன் தலைமை தாங்கினார். ராஜகோபால் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அகில இந்திய பொதுச்செயலாளர் மணிமாறன் பேசும் பொழுது இன்றைய நாட்டுடமை வங்கி அதிகாரிகள் படும் சிரமங்கள், அதை களையும் விதம் பற்றி விரிவாகப் பேசினார். மேலும் தம் உரையில் இப்போது வழங்கப்படும் ஊதிய உயர்வு மனமகிழ்ச்சி தரும் படி இல்லைதான், ஒவ்வொரு அதிகாரியின் வாழ்க்கை தரம் குறைந்து விடாமல் நடத்தும் அளவு வழங்கப்படவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட வேண்டும் என்பது எப்படி நிதர்சனமான உண்மையோ, அப்படி நாமும் நமது வங்கி மேலும் முன்னேற சிறப்பாக தற்கால தொழில்நுட்பத்தில் இம்மியளவும் மாறாமல் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் சென்னை வட்ட பாலாஜி, பிரபு, ராதாகிருஷ்ணன், மீனாட்சி சுந்தரம், விமல் உட்பட மண்டலத்தில் உள்ள அனைத்து நிலை அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக தியாகராஜன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 20 = 26