உ.பி.,யில் நடந்த கோர விபத்தில் 14 பேர் பலி: முதல்வர் யோகி நிதியுதவி

உத்தரப் பிரதேசத்தில் இன்று (நவ.,20) அதிகாலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் பலியாகினர்.

உ.பி., மாநிலம் குண்டா கிராமத்தில் நடந்த திருமண விழாவுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் காரில் சென்று திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது பிரதாப்கர் அருகே வந்தபோது சக்கரம் பழுதாகி சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம் கார் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 6 குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் இரங்கல்

சாலை விபத்தில் 14 பேர் இறந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்று பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு உரிய உதவிகளைச் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

52 − = 47