உத்தரபிரதேச அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி உள்ளது : உலக சுகாதார அமைப்பு

உத்தரபிரதேச அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு நாடும், வைரசை கட்டுப்படுத்துவதில் கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ரோடரிகோ ஆப்ரின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ‘கொரோனா பாதித்தவர்களின் தொடர்புகளை அடையாளம் காண்பதில் உத்தரபிரதேச அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது. 70 ஆயிரம் முன்கள பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய செயல்பாடுகள், மற்ற மாநிலங்கள் பின்பற்றும் அளவுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =