உதயநிதி ஸ்டாலின் கைது: ஆலங்குடியில் சாலைமறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து ஆலங்குடி வடகாடு முக்கத்தில் பஸ் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகை மாவட்டம், திருக்குவளையில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வடகாடு முக்கத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆலங்குடி, வடகாடு முக்கத்தில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் செல்வம் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 40 பேரை ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹேமலதா (பொ)தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதே போல், கொத்தங்கலத்தில் எம்.எல்.ஏ. மெய்யநாதன் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்ட 30 பேரை கீரமங்கலம் போலீசார் கைது செய்தனர். ஆலங்குடி மற்றும் கீரமங்கலம் ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்த பின்பு வழக்கம்போல் வாகனங்கள் சென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

51 + = 52