ஆலங்குடி அருகே ரூ.15 லட்சம் மதிப்பிலான புதிய உணவுக்கூடத்தை திமுக எம்எல்ஏ திறந்து வைத்தார்

ஆலங்குடி அருகே ரூ.15 லட்சத்தில் புதிய உணவுக்கூட கட்டிடத்தை ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ.சிவ.மெய்யநாதன் தலைமையில் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வேப்பங்குடி ஊராட்சி திருவரங்குளம் பாரதியார் நகர் பகுதியில் ரூ.15.லட்சம் மதிப்பிலான புதிய உணவுக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இதில் ஒன்றிய பெருந்தலைவர் கேபிகேடி.-தங்கமணி, ஒன்றிய துணை செயளர்கள் விவசாயி (எ) விஜயன், ஆலங்குடி வீரை மெய்யர், திருக்கட்டளை சங்கர், கருணா மற்றும் கட்சியின் முன்னோடிகள் கலந்து கொண்டனர். ஆலங்குடி சட்டமன்ற தொகுதி வேப்பங்குடி ஊராட்சி, திருவரங்குளம், பாரதியார்நகர், காதிகிராப்ட் நூற்பாலை ஆலை தொழிலாளார்கள் பணிபுரியும் பெண்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்குவதில்லை என்ற கோரிக்கையை எம்எல்ஏ முன் வைத்தனர். உடனே அவர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியை தொடர்பு கொண்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய போது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதில் ஒன்றிய பெருந்தலைவர் புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, ஆலங்குடி நகரத்திற்குட்பட்ட அனைத்து பூத்களுக்கும் பிஎல்ஏ 2 முகவருக்கான அடையாள அட்டையை ஒன்றிய செயலாளர் தங்கமணி மற்றும் நகர செயலாளர் பழனிக்குமார், ஒன்றிய துணைச்செயலாளர் விவசாயி (எ) விஜயன், மாற்றுத்திறனாளிகள் மாவட்ட செயலாளர் செல்வம், விவசாய நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 12 = 21