நடிகை குஷ்பு பயணித்த கார் மதுராந்தகம் அருகே விபத்து

நடிகை குஷ்பு பயணித்த கார் மதுராந்தகம் அருகே சென்ற போது கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தன்னுடைய காரில் கடலூர் புறப்பட்டுள்ளார். மதுராந்தகம் அருகே கார் சென்றபோது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி குஷ்பு சென்ற காரின் பக்கவாட்டில் மோதியுள்ளது. இதில் காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளது. குஷ்பு உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து குஷ்பு தெரிவித்ததாவது, கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் கார் மட்டுமே சேதம் அடைந்தது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + = 28