சேலத்தில் ஆன்லைன் குறைபாடுகளை நீக்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜீவானந்தம் தலைமை தாங்கினார். முன்னாள் திமுக வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது சேலத்தை சேர்ந்த முதலமைச்சர் கட்டுமான தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறிவிட்டார் என்றும் எஞ்சியுள்ள காலத்திலாவது இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்ட முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா, தற்போது கட்டுமான தொழிலாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்ந்த உடன் இவர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்றும் வீரபாண்டி ராஜா தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆன்லைன் வழி பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனு சமர்ப்பித்தல் உள்ளிட்ட அனைத்திலும் தொழிற்சங்க பரிந்துரையை ஏற்க வேண்டும்.விடுபட்டுப்போன அனைவருக்கும் கொரோனா நிதி வழங்க வேண்டும். விண்ணப்பம், எஸ்எம்எஸ் உள்ளிட்ட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். ஓடிபி எண் குறைந்தபட்சம் 10 நிமிடம் நீடிக்க வேண்டும். வயது சான்றிதழ் ஆவணமாக டாக்டர்கள் கொடுக்கும் சான்றிதழை ஏற்றுக்கொள்ளவேண்டும். அஞ்சலக வங்கி, அட்டவணை வங்கி உள்பட அனைத்து வங்கி கணக்குகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் பலராமன், செயலாளர் வெங்கடேஷ்,பொருளாளர் பழனி, முன்னாள் வாரிய செயலாளர் அழகேசன், விவசாய தொழிலாளர் கட்சி செங்கோடன்,துரை ரமேஷ், செந்தில்குமார், சதீஸ்குமார், டேனியல் ராஜா, சின்னு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

69 − 62 =