கோவையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக போட்டியிடும் ராமசாமி பேட்டி

சிறு குறு படத் தயாரிப்பாளர்களை காப்பதே எங்களது அணியின் நோக்கம் என தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக போட்டியிடும் ராமசாமி கோவையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் 22ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக போட்டியிடும் ராம நாராயணன் முரளி என்கிற ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் 4500க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் உள்ளனர் எனவும், இதில் 1307 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்றார். தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறோம் எனவும் கோவை மாவட்டத்தில் உள்ள 62 தயாரிப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்ட கோவை வந்துள்ளதாக தெரிவித்தார். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 4 அணிகள் போட்டியிடும் நிலையில் தங்களது அணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். தங்களது அணி வெற்றி பெறும் பட்சத்தில் சிறு குறு திரைப்பட தயாரிப்பாளர்களை பாதுகாப்போம் என தெரிவித்த அவர், திரையரங்க உரிமையாளர்களுக்கு உறுதுணையாக இருந்து குறைகளைக் களைய முற்படுவோம் என தெரிவித்தார். மேலும் கேளிக்கை வரிக்கு வரி விலக்கு அளிக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் எனவும் ஓ.டி.டி தளங்களில் திரைப் படங்கள் வெளியாவதை வரவேற்கிறோம் எனவும், திரையரங்க அனுபவத்தை ஓடிடி தளங்களில் உணர இயலாது எனவும் தெரிவித்தார். 400 திரைப்படங்களுக்கு மேல் வெளியாகாமல் உள்ள நிலையில் அவற்றை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், சிறு பட்ஜெட் திரைப்படங்களை தொலைக்காட்சிகளில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இராமநாராயணன் முரளி என்கிற ராமசாமி தெரிவித்தார்.இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது கொளரவ செயலாளர் ராஜேஷ், செயற்குழு உறுப்பினராக போட்டியிடும் தங்கம் சேகர், நீலகிரிஸ் முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 33 = 43