புதுக்கோட்டையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் நமுனை சேதுபதி அணி கோப்பையை தட்டிச் சென்றது

புதுக்கோட்டையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் நமுனை சேதுபதி அணி வெற்றிக் கோப்பையுடன் முதல் பரிசு ரூபாய் 50 ஆயிரத்தை தட்டிச் சென்றது.

புதுக்கோட்டை மாவட்டம் சத்யமங்களம் அடுத்துள்ள ஆர்எம்டிசிசி அணியினரால் ஆர்டிஆர் ரங்கராஜ் அவர்களின் நினைவாகவும் தீபாவளியை முன்னிட்டும் மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி கடந்த 10ம் தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள பிரபல விளையாட்டு வீரர்களை கொண்டுள்ள 24 அணிகள் பங்கு பெற்றன. இதில் நமுனை சேதுபதி அணி வெற்றி பெற்று முதல் பரிசு 50000-யும் வெற்றி கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த காணாடுகாத்த அணிக்கு ரூ.40000-மும் , மூன்றாம் இடம் பிடித்த இடம் பிடித்த நாட்டரசன்கோட்டை அணிக்கு ரூ.30000-மும், நான்காம் இடம் பிடித்த உடையான்டிபட்டி அணிக்கு ரூ.20000-மும் வழங்கப்பட்டது.

வீரம் stones சார்பாக வழங்கப்பட்ட முதல் பரிசினை டாக்டர் நடராஜன் முத்துசாமி கண்டியார் சார்பாக பொது மேலாளர் சுரேன் வழங்கினார். கொரோனா பேரிடர் காலத்தில் விளையாட்டு வீரர்களின் நீண்ட நெடிய ஓய்வுக்குப் பிறகு புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலத்தில் மாநில அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சிறப்பு மிகச்சிறப்பு வாய்ந்த வீரர்கள் பங்கேற்றது பொதுமக்களுக்கும் மற்ற வீரர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =