நாடு முழுவதும் தீபாவளி கோலாகல கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகை இன்று, நவ.,14ம் தேதி நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்துக்களின் புனிதப் பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையில் துன்பம் என்னும் இருளை நீக்கி மகிழ்ச்சி என்னும் ஒளியை வழங்கும் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபங்களின் வரிசை என்று தமிழில் பொருள்படும் இந்நன்னாளில் மக்கள் அனைவரும் அதிகாலை எழுந்து கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, பலகாரங்கள், உணவுப்பொருட்களை இறைவனுக்கு படைத்து மகிழ்வர்.

தீபாவளியன்று காலை, மாலை இரு வேளைகளிலும் பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்பு கொளுத்தியும் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். பெரும்பாலான மக்கள் அன்றைய தினம் கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவார்கள். இந்தியாவில் இந்துக்கள் மட்டுமில்லாமல் சமண, புத்த, சீக்கிய மதத்தினை சேர்ந்தவர்களும் இப்பண்டிகையை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர். இந்நன்னாளில் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

புதுகை வரலாறு நாளிதழ் இந்தியா மற்றும் உலகில் உள்ள வாசகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

60 − = 57