தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை நகரபோக்குவரத்து தற்காலிக மாற்றம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை நகர போக்குவரத்து தற்காலிக மாற்றம் செய்யப்பட்டு இன்றில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

புதுக்கோட்டைமாவட்டகாவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன் உத்தரவின்படிவருகின்ற 14.11.2020-ம் தேதிதீபாவளிபண்டிகையைமுன்னிட்டு புதுக்கோட்டைமாவட்டம்,புதுக்கோட்டைநகர் பகுதியில் கூட்டநெரிசலைதவிர்க்கும் பொருட்டும்,கொரனாபரவல் தடுப்புமுன்னெச்சரிக்கைநடவடிக்கையாகவும் இன்று11.11.2020-ம் தேதி (புதன்கிழமை) முதல் 14.11.2020-ம் தேதி (சனிக்கிழமை) அதிகாலைவரைதற்காலிகமாகபோக்குவரத்துபாதைமாற்றம் செய்யர்த்தகசங்கத்தினர்களுடன் சேர்ந்துஉத்தேசிக்கப்பட்டுள்ளது. 

1)புதுக்கோட்டைபேருந்துநிலையத்திலிருந்துதஞ்சாவூர் மார்க்கமாகசெல்லும் பேருந்துகள்மற்றும் அனைத்துரகவாகனங்களும் புதியபேருந்துநிலையம்,மகளிர்கலைக்கல்லூரி,பிஎல்ஏ ரவுண்டானா, பால்பண்ணை,சங்கரமடம் ரோடு,வடக்கு 4-ம் வீதி,மச்சுவாடி(ஒருவழிப்பாதை)வழியாகசெல்லவேண்டும்.

2)தஞ்சாவூரிலிருந்துபுதுக்கோட்டைபுதியபேருந்துநிலையத்திற்குவரும் பேருந்துகள் மற்றும் அனைத்துரகவாகனங்கள் மச்சுவாடி,வடக்கு 3-ம் வீதி,திலகர் திடல்,மேல 5-ம் வீதி(சந்தைபேட்டை) (ஒருவழிப்பாதை)வழியாகவரவேண்டும்.

3)புதுக்கோட்டைபுதியபேருந்துநிலையத்திலிருந்துஆலங்குடி,அறந்தாங்கிமற்றும் பட்டுக்கோட்டைசெல்லும் வாகனங்கள்புதியபேருந்துநிலையம்,பழையபேருந்துநிலையம்,மக்கள் மன்றம்,பேராங்குளம் (ஒருவழிப்பாதை)வழியாகசெல்லவேண்டும்.

4) ஆலங்குடி,அறந்தாங்கிமற்றும் பட்டுக்கோட்டையிலிருந்துபுதுக்கோட்டைபுதியபேருந்துநிலையத்திற்குவரும் வாகனங்கள்பேராங்குளம்,பழையபேருந்துநிலையம்,வழியாகபுதியபேருந்துநிலையம் (இரு வழிப்பாதை)வரவேண்டும்.

5)மச்சுவாடியிலிருந்துகடைவீதிசெல்லும் சிறியரகவாகனங்கள் வடக்கு 3-ம் வீதி,கீழ 3-ம் வீதி(இரு வழிப்பாதை)வழியாகசெல்லவேண்டும்.

6)பழையபேருந்துநிலையத்திலிருந்துசெல்லும் சிறியரகவாகனங்கள்பேராங்குளம்,கீழ 4-ம் வீதி,வடக்கு 4-ம் வீதி(ஒருவழிப்பாதை)வழியாகசெல்லவேண்டும்.

7)இருசக்கரவாகனத்தில் வருபவர்கள் தங்களது இருசக்கரவாகனத்தைபிருந்தாவனம் ரோடுமுதல் பழனியப்பாமுக்கம் வரையிலும்,கீழ 2-ம் வீதிமற்றும் அண்ணாசிலைமுதல் முருகன் கோவில் முக்கம் வரையிலும் இருசக்கரவாகனங்கள் மட்டும் நிறுத்தவேண்டும்.மூன்றுமற்றும் நான்குசக்கரவாகனங்கள் மேற்படி இடங்களில் நிறுத்தஅனுமதியில்லை.

8)கீழ ராஜ வீதியில் எந்தவாகனமும் நுழையஅனுமதிக்கப்படமாட்டாது.என்று அவர் தனது செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 3 =