ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரிகளின் 11வது பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரிகளின் 11வது பட்டமளிப்பு விழாவானது இன்று அமராவதிபுதூர் கல்லூரி வளாகத்தில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.

இப்பட்டமளிப்பு விழாவில் இருபாலர், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் வரவேற்புரை மற்றும் கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்தார். இவ்விழாவில் அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர், பேராசிரியர் சுப்பையா பட்டமளிப்பு விழாவிற்கு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர்தம் சிறப்புரையில், ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் வாழ்க்கையில் பட்டம் பெறும் இன்றைய தினம் முக்கிய தினமாகும். நீங்கள் இந்த பட்டம் பெறக் காரணமாக இருந்த ஆசிரியர், பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகம், பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசு அணைவருக்கும் முதலில் நன்றியை தெரிவிக்கவேண்டும். இவர்கள் அனைவரும் நீங்கள் பட்டம் பெற உங்களுக்கு துணைநின்றவர்கள். ஆசிரியர் பாடங்களை நடத்துவது, தகவல்களை கொடுப்பது போல் இல்லாமல், பாடங்களை வாழ்க்கையோடு இணைந்ததாக நடத்த வேண்டும். மேலும் அறிவை மட்டும் போதிக்காமல், மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற மனதளவில் திடமாகவும், தன்னம்பிக்கையோடும் இக்கால தொழில்நுட்பத்திற்கு ஏற்றார் போல் மாணவர்களைத் தயார் படுத்தவேண்டும். அப்பொழுது தான் மாணவர்கள் வாழ்க்கைத் திறனை பெறுவார்கள். இதுதான் உண்மையான வாழ்க்கை திறனை பெறுவதற்கும், வாழ்வதற்கும் வழிவகுக்கும். அதற்கு ஆசிரியர் வகுப்பறைக்கு செல்லும் போது புன்னகையோடு செல்ல வேண்டும். அப்பொழுது தான் மாணவர்கள் மகிழ்ச்சியோடு கற்பார்கள். மாணவர்கள் எதிர்பார்பதை கொடுப்பவர்களாக ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். மேலும் அனைத்து விதமான பாடங்களை நடத்தும் போது கற்றலுக்கு தகுந்த வளங்களை ஆசிரியர் பயன்படுத்த முயற்;சிக்கவேண்டும். அதுதான் அவர்களது கற்றலை மேன்மையடைய செய்யும். ஒருகாலத்தில் நான் தொழிற்நுட்ப பயன்பாடுகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என நினைத்ததுண்டு. ஆனால் கொரோனா அதற்கு வழிவகுத்தது, காரணம் அனைத்து கல்வி நிலையங்களிலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்றல் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. வருங்காலங்களில் தொழில்நுட்பத்தின் தாக்கம் மேலும் சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை. ஆசிரியர் என்பவர்கள் புதிய சிந்தனை, புதிய கருத்து வாழ்க்கையோடு இணைந்த கற்பித்தல் முறைகளை வழங்க வேண்டும். அப்போது தான் மாணவர்கள் வாழ்க்கைத் திறனைப் பெற்று வாழ்க்கையில் சிறந்து விளங்குவார்கள். அதற்கு இன்று பட்டம் பெறும் மாணவர்கள் அனைவரும் சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என வாழ்த்துக்கூறி சிறப்புரையாற்றினார். இவ்விழாவானது அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியுடன், அனைவரும் முகக்கவசம் அணிந்து கலந்துகொண்டனர். இவ்விழாவில் பல்கலைக்கழகத் தரம் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மற்றவர்கள் ஆன்லைன் வழியாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

25 + = 27