புதுக்கோட்டை மரம் நண்பர்கள், துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாட்டம்

புதுக்கோட்டை மரம் நண்பர்கள் புதுக்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர். 25 துப்புரவுபணியாளர்களுக்கு அரிசி மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பித்தனர்.

மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் எட்வின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். மரம் நண்பர்கள், பேரா.சா.விஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி, ஷெரிப், பழனியப்பா கண்ணன், விவசாய அணி மாவட்ட செயலாளர் கார்த்திக் மெஸ் மூர்த்தி, சக்திகணேஷ், முத்தையா, ஸ்டார் மொபைல் ராசு, பொறியாளர்கள், ரியாஷ் கான், இறையன்பு ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

23 − = 15