குழந்தைகளை நேரில் சந்தித்து கௌரவப்படுத்திய ஆணைய உறுப்பினர்

சென்னை வேளச்சேரியில் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ள விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ள குழந்தைகளை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் நேரில் சென்று கௌரவித்தது குழந்தைகளுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சியே தந்திருப்பதாக அவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்றின் காரணமாக கடந்த 7 மாதத்திற்கு மேலாக குழந்தைகள் வீட்டில் முடங்கி கிடக்கும் சூழ்நிலை நிலவி
வருகிறது, அதனை கருத்தில் கொண்டுசென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் துணை பேராசிரியர் பிரபல மருத்துவர் லதா மகேஸ்வரி ஆனந்த் முயற்சியில் இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் அகாடெமி என்னும் விளையாட்டுக் கூடம் துவங்கப்பட்டுள்ளது.
அதன் முதன் மற்றும் துவக்க போட்டியாக வரும் நவம்பர் 16 ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் குழந்தைகள் போட்டியை துவங்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்ஜி ஆனந்த் நேரில் சென்று தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் பூக்கள் கொடுத்து அழைத்தது கௌரவப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

73 − 67 =