தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். கோவை மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. கவுண்டம்பாளையம் சந்திப்பில் 1 கி.மீ. நீளத்திற்கு மேம்பாலப் பணிகள் நடக்கின்றன. மேலும் உக்கடம் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் கூறினார். நீலகிரி, திருப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாளை முதல்வர் நேரில் ஆய்வு செய்கிறார். கொரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்த பலரும் ஆன்லைனில் இருக்கும் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை கட்டி விளையாடினர். ஒரு கட்டத்தில் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் தமிழகத்தில் நடைபெற்று வந்தது. அண்மையில் கூட அடுத்தடுத்து இறப்பு சம்பவங்கள் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணையில் உள்ளது. ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தொடர்பாக பல புகார்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அதனை தடை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவது மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படும், விளையாட்டில் ஈடுபட்டால் குற்றவாளிகளாக கருதப்படுவர். மேலும் பேசிய அவர் 144 தடை உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க இயலாது எனவும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் யார் வேண்டுமானலும் கட்சி தொடங்கலாம் என நடிகர் விஜய் கட்சி தொடங்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக அரசு தான் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =