துபாயில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு புதுக்கோட்டை கலெக்டர் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் வீரர்

அகில இந்திய அளவில் துபாயில் இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திவ்யாங் கிரிக்கெட் போட்டியில் வறுமையின் காரணமாக பங்கேற்பதில் சிரமம் இருப்பதால் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் உதவியை எதிர்பார்த்து விவசாயக் கூலித் தொழிலாளியின் மகன் மாற்றுத்திறனாளி வீரர் காத்துள்ளார்.

மாற்றுத்திறனாளி வீரர் முருகன்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த அரசந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் மாற்றுத்திறனாளி வீரராவார் கடந்த ஆறு வருடங்களாக மாநில, மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களையும் சான்றுகளையும் பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் தற்பொழுது இம்மாதம் இறுதியில் துபாயில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆனால் துபாய் சென்று வர போதிய வருவாய் இல்லாததாலும் குடும்ப சூழ்நிலையின் காரணமாகவும் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதுடன் மாவட்ட கலெக்டரின் உதவியை முழுமையாக நம்பியுள்ளார்.

மாற்றுத்திறனாளி சக வீரர்கள் அணியுடன் முருகன்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி சந்திக்க வந்த முருகன் புதுகை வரலாறுவிடம் பேசுகையில்: நான் நம்முடைய மாவட்ட கலெக்டரை கடந்த மாதம் 19ஆம் தேதி மாற்றம் 28-ஆம் தேதிகளில் சந்திக்க வந்தேன் ஆனால் அவரை சந்திக்க அனுமதிக்க மறுத்து விட்டனர். நான் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன் எனது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனது தாயார் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றார் எனக்கு இரண்டு அக்காக்கள் ஒரு அண்ணன் வீட்டில் கடைசி பிள்ளை நான்தான் இதுபோன்ற வாய்ப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கிடைத்தது அன்றும் வறுமை என்னை சூழ்ந்து இருந்ததால் அந்த போட்டியிலும் என்னால் பங்கேற்க முடியவில்லை தற்பொழுது மீண்டும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது இன்றைக்கும் நான் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருவதால் எனக்கான உதவி தேவைப்படுகின்றது.

கலெக்டருக்கு அஞ்சலில் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களான நீலகிரி,அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு துபாய் சென்றுவர பண உதவி வழங்கி உள்ளனர் ஆனால் நம்முடைய மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரை சந்திக்கவே அனுமதிக்க மறுக்கின்றனர் என்னுடைய கனவு வறுமையால் தடைப்பட போகின்றது தமிழக அணிக்காக விளையாட வேண்டும் என்பது எனது நீண்டநாளைய ஆசை அதற்க்கு நல்ல உள்ளம் படைத்த நபர்கள் எனக்கு உதவிட வேண்டும் என முருகன் கோரிக்கைவிடுத்ததுடன்.மாவட்ட கலெக்டரை நேரில் தானே சந்திக்க அனுமதிக்க மாட்டீர்கள் என்ற கேள்வியுடன் தனது மனுவை அஞ்சல் தபாலில் கலெக்டருக்கு அனுப்பி வைத்துள்ளார் முருகன்.

நீலகிரி கலெக்டர் மாற்றுத்திறனாளி வீரர் ரவிசந்திரனுக்கு உதவிதொகை வழங்குகிறார்

புதுகை வரலாறு நம்பிக்கை

கலெக்டர் உமாமகேஸ்வரி

இதே மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி பலமுறை முருகனைப் போன்ற சிலர் ஏழ்மையின் காரணமாக தம்முடைய முயற்சியினால் சாதிக்க நினைத்து விமானத்தில் பறந்து சென்று வெற்றி வாகை சூடியவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துகொண்டுள்ளார் அப்பேற்பட்ட சமூக நலனில் பெரிதும் அக்கரைகொண்ட கலெக்டர் உமாமகேஸ்வரி இந்த முருகனை கைவிடமாட்டார் என்று புதுகை வரலாறு நம்புகின்றது. முருகனுக்கு உதவி செய்ய உள்ளோர் தொடர்புக்கு:9080652133

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

79 + = 81