வேளாண் சட்டத்தை ஆதரித்து பாஜகவினர் சைக்கிள் பேரணி

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை ஆதரித்தும், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை தெற்கு மாவட்ட பாஜகவினர் செட்டிபாளைத்திலிருந்து க.க.சாவடி வரை சைக்கிள் பேரணி சென்றனர்.

மத்திய அரசு அன்மையில் கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டத்தில் உள்ள நன்மைகள் குறித்து பாஜகவினர் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செட்டிபாளையத்திலிருந்து க.க.சாவடி வரை சைக்கிள் பேரணி சென்றனர். அப்போது வேளாண் சட்டம் குறித்தும் அதன் நன்மைகள் குறித்த பதாகைகளை ஏந்திச்சென்றனர். மேலும் பேரணியின் போது நாச்சிபாளையம், தக்காளி மார்ககெட் சென்று அங்குள்ள விவசாயிகளிடம் வேளாண் சட்டம் குறித்து பேசினர். அப்போது பேசிய தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் கூறும் போது, புதிய விவசாயச் சட்டத்தால் வரிகள் குறையும். நேரடி வர்த்தகம் ஊக்குவிக்கப்படும். வெளிநாடு, உள்நாட்டு ஏற்றுமதி அதிகரிக்கும். இந்த சட்டத்தால் இடைத் தரகர்கள் முறைக்கு வாய்ப்பு இல்லை. விளை பொருட்களைக் கள்ளச் சந்தையில் பதுக்க முடியாது. விவசாயிகளுக்கு அதிக லாபத்தை புதிய சட்டம் வழங்கும். விவசாய ஒப்பந்தம் உள்ளூர் மொழிகளில் இருக்கும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

97 − = 92