வாக் பார் யுவர் ஹார்ட் நிகழ்ச்சி நிறைவு

உலக இதய தினத்தையொட்டி புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தின் சார்பாக வாக் பார் யுவர் ஹார்ட் என்ற 21நாட்கள் இன்டர்நேஷனல் வாக்கத்தான் நிகழ்ச்சியின் நிறைவு நாள் நடைபயிற்சி புதுக்கோட்டையில் உள்ள ஆரஞ்சு நிறுவனத்தின் வளாகத்தில் இன்று நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி தொடங்கப்பட்டு அக்டோபர் 19ம் தேதியோடு 21 நாட்கள் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் 13 நாடுகளிலிருந்து 420 தன்னார்வ தொண்டு அமைப்புகளின் சங்கங்களில் இருந்து 3,500 உறுப்பினர்கள் கலந்து கொள்ள பதிவு செய்து ஜூம் வீடியோ காணொளி மூலமாக கலந்துகொண்டு உலக சாதனை முயற்சிக்காக நடைப்பயிற்சி மேற்கொண்டனர். இந்த விழாவிற்கு புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆரஞ்சு சினேகா தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியினை ரோட்டரி மாவட்ட 3000 மாவட்ட செயலாளர் பொறியாளர் கனகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தவுடன் பல்வேறு இடங்களில் இருந்து கலந்து கொண்ட பல்வேறு ரோட்டரி சங்கங்கள் மற்றும் பல்வேறு தொண்டு அமைப்புகளின் தலைவர்களும் ஒரே நேரத்தில் நிறைவு நாள் நடைபயிற்சியை ஆரம்பித்தனர். இவ்விழாவில் மகாராணி ரோட்டரி சங்கத்தின் தலைவர் சினேகா, இந்த நிகழ்ச்சியில் 13 நாடுகளில் இருந்து தன்னார்வலர்கள் 3500 பேர் பதிவு செய்து கலந்து கொண்டனர். அதன் பின் தினமும் 2000 பேர் மொபைல் ஆப் மூலமாக அனைவருக்கும் நடைபயிற்சி மேற்கொண்டனர். இது நடைபயிற்சி பற்றிய விழிப்புணர்வும், ஆர்வமும் மற்றும் இதயத்தின் முக்கியத்துவத்தையும் உணர செய்ய வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டதாக கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்டம் 3000தின் துணை ஆளுநர்கள் ராணி ரோசலின், முருகப்பன், புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஜெயக்குமார், செயலாளர் ராஜா முகம்மது, பொருளாளர் தனஞ்செயன், புதுக்கோட்டை விக்டரி லயன்ஸ் சங்கத்தின் தலைவர் காமராஜ், மண்டலத் தலைவர் ஜவகர் மற்றும் கார்த்தி கலந்து கொண்டு இந்த 21 நாட்கள் நடைபயிற்சி மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்கள். இவ்விழாவின் நிறைவாக “வாக் பார் யுவர் ஹார்ட்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த 420 சங்கங்களுக்கும் புதுக்கோட்டை மஹாராணி ரோட்டரி சங்கத்தின் செயலாளர் மாரிகண்ணு வைரவன், வாக் பார் யுவர் ஹார்ட் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அன்பு தனபாலன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 46 = 49