மதுரை துவரிமானில் எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பாக ஆலோசனை கூட்டம்

மதுரை துவரிமானில் எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவிடம் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் சோலை ராஜா தலைமையில், துவரிமான் இளைஞரணி நிர்வாகிகள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட பொருளாளர் வில்லாபுரம்ராஜா, முன்னாள் சேர்மன் பரவைராஜா, எம்ஜிஆர் இளைஞர்அணி மாநில இணைச்செயலாளர் கிரம்மர்சுரேஷ், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் செந்தில்குமரன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் பெரியசெல்வம், தாராபட்டி முத்து, கீழமாத்தூர் தங்கராஜ், துவரிமான் சோமசுந்தரம் உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 2 =