புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை

2020ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பெமினாபாத்திமா நீட் தேர்வில் 680/720 மதிப்பெண்கள் பெற்று 99.94 சதவீதம் விழுக்காடுடன் மாநிலஅளவில் 7 வது இடத்தையும், அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 693 வது இடத்தையும் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளார். நிக்குல் அர்ஜூன் 665/720 மதிப்பெண்கள் பெற்று 99.86 சதவீதம் விழுக்காடுடன் இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் 1758வது இடத்தைப் பிடித்துள்ளார்.பின்வரும் மாணவர்கள் தங்களின் வரலாற்றுப் பயணத்தோடு சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் கால் பதிக்க விருக்கிறார்கள். ஹானுல் பரிகா 567 / 720, முத்துகுகன் 558 / 720, ரிக்கிபிரான்சிஸ் 537 / 720, தருன் 492 / 720, சையதுசுல்தான் சைமர் அப்துல்லா 481 / 720, கௌசிக் 461 / 720 மற்றும் நர்மிதா 448 / 720 மதிப்பெண்கள் பெற்று மௌண்ட் சீயோன் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் மட்டுமல்லாது ஐஐடி,ஜேஇஇ தேர்விலும் சாதனைபடைத்துள்ளனர். கடந்த வருடத் தேர்வில் சாலைபிரகதிஸ்வரன் 99.05% விழுக்காடும், லக்ஷ்மிநாராயணா 96.31% விழுக்காடும், இவ்வருடத்தில் மாணவன் சுதர்சன் 95.89%. விழுக்காடு பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவர்களை மௌண்ட் சீயோன் முதுநிலை முதல்வரும், மௌண்ட் சீயோன் பள்ளிகளின் இயக்குநருமான டாக்டர். ஜோனத்தன். ஜெயபரதன், பள்ளியின் ஓருங்கிணைப்பாளரும், இணை இயக்குநருமான ஏஞ்சலின் ஜோனத்தன், முதல்வர். டாக்டர் ஜலஜா குமாரி, பயிற்சியாளர் சுரேஷ் கண்ணா, ஓருங்கிணைப்பாளர் குமரேஷ் மற்றும் ஆசிரியர் குழும உறுப்பினர்கள் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 46 = 50